யாரிடமாவது பேச வேண்டும்
என்று தோன்றும் போதெல்லாம்
யாரிடம் பேசுவது என்றொரு கேள்வி
தொக்கி நிற்கிறது...
இந்த யாரிடம் பேசுவதென்ற கேள்வியே
எனக்குள் இருக்கும் என்னிடம்
நான் பேச ஒரு காரணமானது
காரணங்களின் அர்த்தங்கள்
அனைத்தும் நான் கண்ணாடி
முன் நிற்கும் போது எட்டிப் பார்க்கிறது...
கண்ணாடிக்கு முன்னால் நிற்பது -”நான்”
கண்ணாடியில் பிம்பமாய் தெரிவது - ”எனக்குள்
இருக்கும் நான்”
இடையில் சிக்கித் தவிக்கிறது
என் மௌனங்களின் பேரலை !!!
ஞாபகத்தில் சிக்கியவையெல்லாம்
எனக்குள் பிரதிபலிக்க
வெளியே சுற்றும் “நான்” - “எனக்குள் சுற்றும் நான்”
உடன் பேச ஆரம்பிக்கிறது.
நடக்கும் உரையாடல்களை வேடிக்கை
பார்க்கும் வேலை எனக்கு
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது
எனக்குள் எழும் இன்னொரு கேள்வி
எனக்கும் இந்த வாழ்க்கைக்கும்
என்னதொரு தொடர்பு இருக்கிறது ???
No comments:
Post a Comment