Tuesday, December 25, 2012
இன்னும் கொஞ்ச தூரம்தான்...
நான் பயணிக்க வேண்டியது
இன்னும் கொஞ்ச தூரம்தான்...
இருந்தாலும்
விரல்களின் இறுக்கம்
இடையிவெளியில்லா நெருடலை
மனதில் மூட்ட மௌனத்தில் உறைகிறேன்...
காலம் மெல்ல மெல்ல
பின்னோக்கிச் செல்வது போல்
என் உணர்வுகள்...
திசையறியா பறவை ஒன்று
திகைப்பது போல்
என் எண்ணங்கள்...
நிகழ்காலம் அடிக்கடித் தப்பிப் போக
சில நேரம் கடந்த காலத்தின்
சுவடுகளில் உறைகிறேன்...
பல நேரம் எதிர்காலத்தின்
கேள்விகளில் திகைக்கிறேன்...
அச்சங்கள் அவசரமாக
என்னுள் கிளை பரப்புகின்றன
அடிக்கடி என் மௌனங்கள்
திருடு போகின்றன...
செய்வதறியாது
உறைந்து நிற்கும் போது
தூக்கத்தை தொலைத்தவன்
மீண்டும் மீண்டும் மீண்டும்
புரண்டு படுப்பது போல் - காலம்
எவ்வித மாறுதலுமின்றி என் மேல்
பற்றிப் படர்ந்து கொண்டிருக்கிறது...
Tuesday, December 18, 2012
என் முகமற்ற முகம்
என் முகமற்ற முகம் ஒன்றை
உன்னில் தொலைத்திருக்கிறேன்...
ஒவ்வொரு விடியலிலும் உனக்கான
என் புது புது அவதாரம்
காத்திருக்கிறேன்... உன் வழித்தடங்களில்
தினசரி உன் ஒவ்வொரு பார்வையும்
என்னை உன்னில் இருக்கும் என்
முகமற்ற முகத்தோடு
ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது...
எதையும் மறைக்கத் தெரியாதது
உன் பார்வைகள்... அப்பட்டமாய்
உன் ஏமாற்றத்தை எனக்கு
உணர்த்தி விடுகின்றன...
சிறுபிள்ளை போல் உதடு சுழிக்க
வெளிப்படும் உன் பார்வையில்
என் அன்றைய முகம் சிறைபிடிக்கப் படுகிறது...
ஆயிரக்கணக்கான முகங்களோடு
உன்னில் தொலைகிறது - உனக்கான
என் இன்னொரு முகம்...
மீண்டுமொரு விடியல்
மீண்டுமொரு அவதாரம்
பார்வைகள்.... புன்னகைகள்...
தொடந்து கொண்டேயிருக்கிறது.
உலகம் மறைகிறது...
மீண்டும் தோன்றுகிறது...
யுகம் யுகமாய் என் முகமற்ற
முகங்களை நீ களவாடிக் கொண்டேயிருக்கிறாய்...
இல்லை இல்லை....
யுகம் யுகமாக உன்னில் என்னை
தொலைப்பதற்காகவே - உன் வழித்தடங்களில்
நான் காத்துக் கொண்டிருக்கிறேன்...
உனக்கும் எனக்குமான காலம் வேறு வேறு
எப்போதும் உன்னைப் பற்றிய
நினைவுகள் எனக்குள் தீ போல்
பரவிக் கொண்டிருக்கின்றன...
காற்றின் திசைகளை மீறிய - உன்
தீ-யின் அலைகள் எனக்குள்
மேக கூட்டம் போல் மோதுகின்றன...
சுடுவது போல் உணர்வுகள் - ஆனால்
ஆனந்தமாய் மிதந்து கொண்டிருக்கிறேன்...
உன்னைப் பார்க்க,
உன்னிடம் பேச,
உன்னிடம் உன்னிடம் உன்னிடம்
என என் காலம் உன்னை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறது.
உன் பார்வைகளில் எனக்கான
நினைவுகள் உன்னிடம் உறைந்திருப்பதை
காண்கிறேன்...
ஏதோ சில முன்வினை நிகழ்வுகளால்
என்னிடம் அவ்வப்போது நீ ஸ்நேகம் காண்பித்து
என்னை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறாய்...
உன்னை நோக்கி என்னை நகர்த்தும்
அதே காலம்தான் - உன்னை மெல்ல மெல்ல
என் எல்லை தாண்டி விலக வைத்துக் கொண்டிருக்கிறது...
நினைவுகள் எனக்குள் தீ போல்
பரவிக் கொண்டிருக்கின்றன...
காற்றின் திசைகளை மீறிய - உன்
தீ-யின் அலைகள் எனக்குள்
மேக கூட்டம் போல் மோதுகின்றன...
சுடுவது போல் உணர்வுகள் - ஆனால்
ஆனந்தமாய் மிதந்து கொண்டிருக்கிறேன்...
உன்னைப் பார்க்க,
உன்னிடம் பேச,
உன்னிடம் உன்னிடம் உன்னிடம்
என என் காலம் உன்னை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறது.
உன் பார்வைகளில் எனக்கான
நினைவுகள் உன்னிடம் உறைந்திருப்பதை
காண்கிறேன்...
ஏதோ சில முன்வினை நிகழ்வுகளால்
என்னிடம் அவ்வப்போது நீ ஸ்நேகம் காண்பித்து
என்னை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறாய்...
உன்னை நோக்கி என்னை நகர்த்தும்
அதே காலம்தான் - உன்னை மெல்ல மெல்ல
என் எல்லை தாண்டி விலக வைத்துக் கொண்டிருக்கிறது...
Monday, December 3, 2012
உனக்கும் எனக்குமானதொரு முற்றுப்புள்ளி
இனிமேல் உன்னைப் பற்றி
எந்த சிந்தனையும் எனக்குள்
தோன்றக்கூடாது என நினைக்கிறேன்
என் ஒவ்வொரு
நினைவையும்
நொடியையும்
கனவையும் அவ்வப்போது
நீ களவாடிச் சென்றிருக்கிறாய்.
சென்ற நாள் முதல்
இந்த நாள் வரை
உன் பார்வைகளைத் தவிர
வேறு எதையும் - நீ திருப்பித் தந்ததில்லை. ..
உன்னைப் பற்றிய
எல்லா எண்ணங்களையும்
இன்றோடு இத்தோடு
இதோ இந்த கவிதையோடு கரைக்கிறேன்...
எங்கே என் நினைவுகள் - திருப்பித் தா !!!
என்று என்னிடம் - நீ வந்து கேட்கும் வரை
இந்தக் கவிதைதான்
உனக்கும் எனக்குமான முற்றுப்புள்ளி...
எந்த சிந்தனையும் எனக்குள்
தோன்றக்கூடாது என நினைக்கிறேன்
என் ஒவ்வொரு
நினைவையும்
நொடியையும்
கனவையும் அவ்வப்போது
நீ களவாடிச் சென்றிருக்கிறாய்.
சென்ற நாள் முதல்
இந்த நாள் வரை
உன் பார்வைகளைத் தவிர
வேறு எதையும் - நீ திருப்பித் தந்ததில்லை. ..
உன்னைப் பற்றிய
எல்லா எண்ணங்களையும்
இன்றோடு இத்தோடு
இதோ இந்த கவிதையோடு கரைக்கிறேன்...
எங்கே என் நினைவுகள் - திருப்பித் தா !!!
என்று என்னிடம் - நீ வந்து கேட்கும் வரை
இந்தக் கவிதைதான்
உனக்கும் எனக்குமான முற்றுப்புள்ளி...
Sunday, September 2, 2012
மீண்டும் சொல்கிறேன்...
நீ சிரித்துப் பேசும் போது
நான் சிரிக்க வேண்டும் என்று நினைக்கிறாய்
உன் உணர்வுகள் தக்க சமயத்தில்
அப்படியே மற்றோரால் உள்ளிழுக்கப்பட
வேண்டுமென நினைக்கிறாய்...
வார்த்தைகளை வெளிப்படுத்தாமல்
நீ சொல்ல வருவதை புரிந்து கொள்ள
வேண்டுமென்று எதிர்பார்க்கிறாய்...
அது நடக்காவிட்டால் எரிச்சலை
என் மீது உமிழ்கிறாய்...
என் மீது உமிழப்படும் உனக்கான
ஒவ்வொரு உணர்வும் உண்டாக்கிய
தடயங்கள் எப்போதும் அழியாமல்
என்னுள் உறைந்திருக்கின்றன.
உறையும் ஒவ்வொரு தடயமும்
ஓர் உறைவாளை தனக்குள்
உள் வாங்கியிருக்கின்றன - என்பதை
நான் மட்டும் அறிவேன்
உன் கண்களின் வெப்பம்
அதை பொறுத்துக் கொள்ளும் வரை
உன் வார்த்தைகளின் பாரம்
அதை மனம் தாங்கிக் கொள்ளும் வரை
வாள்கள் அனைத்தும் உறங்கிக் கொண்டிருக்கும்...
எனக்குச் சில காலங்கள்
முன்பாக நீ உயிர்த்திருப்பதால்
என் மௌனத்தை தீண்டிப் பார்க்க
உனக்கு உரிமையிருப்பதாய் - நீ
நினைத்துக் கொண்டிருக்கிறாய்...
மீண்டும் சொல்கிறேன்
கவனித்துக் கொள்..
உன் கண்களின் வெப்பம்
அதை தாங்கிக் கொள்ளும் வரை
உன் வார்த்தைகளின் பாரம்
அதை மனம் தாங்கிக் கொள்ளும் வரை
வாள்கள் அனைத்தும் உறங்கிக் கொண்டிருக்கும்....
... ... ...
Thursday, August 16, 2012
உன்னைத் தொடர்கிறேன்
உனக்கும் எனக்கும்
இடையில் ஒரு போராட்டம்
நீயோ ஏதோ ஒன்றை
தொலைத்துவிட்டதைப் போல்
தேடிச் செல்கிறாய்...
நான் உன்னை தொடர்ந்து நடக்கிறேன்...
நான் பின்னால் வருவதை
நீ உணர்ந்தாலும் - திரும்பிப் பார்க்க
விருப்பமில்லாததைப் போல் நடக்கிறாய்...
உனக்கும் எனக்கும்
இடையில் ஒரு போராட்டம்
நீ ஏற்கனவே தொலைத்ததை
தேடி தக்கவைத்துக்கொள்ள
போராடிக் கொண்டிருக்கிறாய்...
நானோ... எங்கோ
உன்னைத் தொலைத்துவிடுவேனோ
என்ற பயத்தில் - உன்னை
பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்...
காலம் நம்மை கவனித்தவாறே
மெல்ல நம்மோடு நடந்து கொண்டிருக்கிறது...
Saturday, August 11, 2012
நீயும் மழையும்...
அடை மழைக்காலமொன்றில்
கையில் குடையின்றி
நீ காட்டும் மௌனங்கள்
என்னை தீயாய் எரித்துக் கொண்டிருக்கிறது...
என்ன செய்வதென தெரியவில்லை
எதுவும் புரியவில்லை
உன்னை விட்டுச் செல்லவும் தைரியமில்லை...
வரமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும்
குழந்தையை போல் நீ கத்தினால் கூட
நான் ஆசுவாசப்படுவேன்
ஆனால் ஒன்றுமே சொல்லாமல்
பார்வையால் என் நெஞ்சை கீறிக் கொண்டிருக்கிறாய்...
நேரம் தன்னை மறந்து
உன்னையும் என்னையும்
சுமந்து நகர்ந்து கொண்டிருக்கிறது...
நான் காத்திருக்கிறேன்...
யுகங்கள் ஆனாலும் பரவாயில்லை
நீ வராமல் ஒரு அடி கூட எடுத்து வைப்பதில்லை
என்ற முடிவுடன்..
நான் ஆசுவாசப்படுவேன்
ஆனால் ஒன்றுமே சொல்லாமல்
பார்வையால் என் நெஞ்சை கீறிக் கொண்டிருக்கிறாய்...
நேரம் தன்னை மறந்து
உன்னையும் என்னையும்
சுமந்து நகர்ந்து கொண்டிருக்கிறது...
நான் காத்திருக்கிறேன்...
யுகங்கள் ஆனாலும் பரவாயில்லை
நீ வராமல் ஒரு அடி கூட எடுத்து வைப்பதில்லை
என்ற முடிவுடன்..
உன்னைக் கடக்கும் போது
உன்னை தாண்டிப் போகும்
ஒவ்வொரு கணமும்
இதயம் லேசாகிறது...
உலகம் தன்னை மறந்து
என்னுடன் சுற்றுகிறது...
கால்கள் உன்னைத் தாண்டி
போகமாட்டேன் என
அடம் பிடிக்கிறது..
அதிர்வுறுகின்ற மூச்சுக்காற்றின்
மிதமான வெப்பங்களில்
உன் நினைவுகள் சுடுகிறது.
இது நடக்கக் கூடாது இது நடக்கக் கூடாது
என்று நினைத்தாலும்...
உன்னைத் தாண்டிப் போகும் அந்த
நிகழ்வு எப்படியோ நிகழ்ந்து விடுகிறது...
நொடிக்கும் குறைவான அந்தக் கணத்தில்
உன்னைப் பார்க்கிறேன்... நீயோ என்னைப் பாராதது
போல் ஓரக்கண்ணால் பார்க்கிறாய்...
ஐயோ... உன்னைத் தாண்டிப் போகும்
ஒவ்வொரு முறையும் நான்
இந்த உலகை வென்று கொண்டிருக்கிறேன்...
Subscribe to:
Posts (Atom)