நீ பேசுகிற வார்த்தைகளில்
எப்போதும் ஒளிந்தேயிருக்கிறது - எனக்கான காதல்
என் மௌன முடிச்சிகளை
அவிழ்த்து எறியும் சூட்சமங்களை
கொண்டது உன் வார்த்தைகள்
நீ பேசிக் கொண்டே இரு..
உன் வார்த்தைகளை
குறிப்பெடுத்துக் கொள்கிறேன்.- ஏனெனில்
அர்த்தங்களோடு நீ பேசுவதே இல்லை
இப்படி
உன்னிடமிருந்த ஏராளமான வார்த்தைகள்
எனக்குள் இடம் மாறின.
இப்போதோ நீ பேசுவதை
நிறுத்திவிட்டாய்.
உன் மௌனத்தை தவிர்க்க முடியாமல்
எனக்குள் தகிக்கிறேன்.
பின்பொரு நாள் நெடிய இடைவெளிக்குப் பின்
உனக்காக காத்திருந்தேன்
அன்றிலிருந்து நீ வரவே இல்லை.
உன் வார்த்தைக்குறிப்புகளை
அங்கேயே விட்டு விட்டு
தினமும் வீடு வருகிறேன்.
உன்னிடமிருந்து உள் வாங்கிய வார்த்தைகள்
அனைத்தும் உன் மௌனத்தால் நிரப்பப்படுகின்றன.
No comments:
Post a Comment