Friday, September 3, 2010

என் செல்ல நண்பனே














நொடிக்கொரு முறை
மாறுகிற உன் முகம்
தெருவோரம் என்னைக் கண்டதும்
சிரிக்கிறது.

என் மூச்சுக்காற்றின் வாசனையில்
என் பாதங்களின் அதிர்வில்
என் குரலில் ஓசையில்
குழைகிறது உன் நேசம்

யாரேனும்
வீட்டுக்குள் வந்தால்
தெரிந்தவர் எனில்
முன்னங்கால்களை தூக்கி
புரியாதவர் எனில்
பின்புறமாக நகர்ந்து
உன் அடையாள முழக்கங்களோடு
வரவேற்கிறாய்...

நான் மறந்த நண்பனைக் கூட
அவன் எப்போதாவது
நம் வீட்டை கடந்தால்
நேசத்துடன் ஞாபகம் கொள்பவன் நீ

ஒவ்வொரு விடியலிலும்
வாசலில் நெட்டி முறிக்கும் போது
உன் வணக்கம் என்னை சிலிர்க்க வைக்கும்...

அன்றும் அப்படித்தான்...
மார்கழி மழை நாள்

விடியலில் ஓரமாய்
சாரல் வீசிக் கொண்டிருந்தது.
கண்களை கசக்கிப் பார்த்தேன்

உன் ஞாபகமாய்
உன் பிம்பங்கள் மட்டும்தான்...
என் ப்ரிய நண்பனே
எனக்கான சராசரி ஆயுள் 60
என வைத்துவிட்டு
உனக்கு மட்டும் ஏன்
7 என வைத்தான் அந்தக் கடவுள்...

No comments: